சேலம்
அண்ணனுக்கு 3 ஆண்டு சிறை
|நிலத்தகராறில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வாழப்பாடி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
வாழப்பாடி
நிலத்தகராறில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வாழப்பாடி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
நிலத்தகராறு
வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 41). இவருடைய அண்ணன் மணி (46). இவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் ஆசைத்தம்பி கடந்த 2018-ம் ஆண்டு தனது விவசாய நிலத்தில் சோளம் பயிரிடுவதற்கு, தனது தாயிடம் விதை சோளம் கேட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மணி, நிலத்தகராறு காரணமாக ஆசைத்தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஆசைத்தம்பி வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மணியை போலீசார் கைது செய்தனர்.
3 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை வாழப்பாடி குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ஆசைத்தம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த மணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்தும் நீதிபதி சன்மதி உத்தரவிட்டார்.