< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
25 Jan 2023 10:49 PM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

வேடசந்தூர் அருகே உள்ள கிரியம்பட்டியை சேர்ந்தவர் பொன்னான் (வயது 64). கூலித்தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு இவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சிறுமியின் உறவினர்கள் வேடசந்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பொன்னான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட பொன்னானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்