< Back
மாநில செய்திகள்
தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
20 Oct 2022 12:15 AM IST

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமி பலாத்காரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஐபிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 37). இவர் 12 வயது சிறுமியை கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தனது வீட்டிற்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தந்தை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

20 ஆண்டுகள் சிறை

அதில், அத்துமீறி சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம், பலமுறை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், 15 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கை, கால்களை கட்டிய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் இவை அனைத்தும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சுப்பிரமணியை, போலீசார் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்