< Back
மாநில செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
தர்மபுரி
மாநில செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
19 July 2022 10:53 PM IST

பாலக்கோடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலக்கோடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமி பலாத்காரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்தானகுமார் (வயது 32). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தனியாக வந்த 14 வயது சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தானகுமாரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிவில் சந்தானகுமார் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அவருக்கு போக்சோ சட்ட பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத்பக்ரதுல்லா நேற்று தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.

Related Tags :
மேலும் செய்திகள்