< Back
மாநில செய்திகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற செய்த ஜடேஜா பாஜக உறுப்பினர்: அண்ணாமலை
மாநில செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற செய்த ஜடேஜா பாஜக உறுப்பினர்: அண்ணாமலை

தினத்தந்தி
|
30 May 2023 4:19 PM IST

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தது பாஜக உறுப்பினர் ரவீந்திர ஜடேஜா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தது பாஜக உறுப்பினர் ரவீந்திர ஜடேஜா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 5-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வெற்றிக்கான ரன்களை அடித்து சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற பெரும் பங்களிப்பை அளித்தார்.

இந்நிலையில்சென்னை அணியின் வெற்றிக்கான ரன்னை அடித்தது பாஜக உறுப்பினர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் ஜாம்நகர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ. அவர் ஒரு குஜராத்காரர். பாஜக உறுப்பினர் ஜடேஜாதான் சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடித் தந்தார்.சென்னை அணியில் ஒரு தமிழக வீரர்கூட விளையாடவில்லை. ஆனால், தோனிக்காக கொண்டாடுகிறோம். குஜராத் அணியில் அதிக ரன்களை எடுத்த சாய் சுதர்ஷன் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்