< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
|25 March 2023 12:05 AM IST
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அண்ணா சிலை அருகே இருந்து பழைய பஸ் நிலையம் ரவுண்டானா வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் கோரிக்கைகள் தொடர்பாக பதாகைகளை அணிந்து பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கசாமி, ஜீவன்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.