< Back
மாநில செய்திகள்
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
சேலம்
மாநில செய்திகள்

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
6 March 2023 12:49 AM IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சேலத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்ட ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகவேள், கோவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் ஜான், திருவேரங்கன், அன்பழகன், மாகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் தொடங்கி வைத்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கை அட்டைகள்

இந்த போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் வைத்திருந்தனர்.

போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சந்திரசேகர் வரதன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்