< Back
மாநில செய்திகள்
இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி

தினத்தந்தி
|
29 Jun 2022 3:46 PM GMT

ராமநாதபுரம் அருகே விபத்தில் பலியான மீனவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி செய்து ஒப்படைக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே விபத்தில் பலியான மீனவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி செய்து ஒப்படைக்கப்பட்டது.

விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சி மடத்தில் வசித்து வந்தவர் அந்தோணி டிட்டோ (வயது40). மீனவரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு கோட்டைப் பட்டிணத்தில் இருந்து காரில் தங்கச்சிமடம் வந்து கொண்டிருந்தார். அப்போது எஸ்.பி.பட்டணம் அருகே எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே அந்தோணி டிட்டோ உயிரிழந் தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்தோணி டிட்டோ மனைவி பாசில்பியா இழப்பீடு கோரி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் விபத்தில் இறந்த அந்தோணி டிட்டோ குடும்பத்திற்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ள ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.92 லட்சத்து 72ஆயிரத்து 234 இழப்பீடு வழங்க கடந்த 2019-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தர விட்டது.

2 ஆண்டுகளாகியும் இழப்பீடு வழங்காமல் இருந்த ஓரியண்டல் நிறுவன அலுவலகத்தை ஜப்தி செய்து அலுவலகத்தில் உள்ள ஏ.சி. டேபிள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை மனுதாரருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜப்தி

இதுதொடர்பாக முதன்மை மாவட்ட நீதிமன்ற ஆமினா அரியவன், அரசு தரப்பில் வி.ஏ.ஓ. முத்தையா, தலையாரி செல்வகுமார் மற்றும் மனுதாரர் உள்ளிட்டோர் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த மேற்கண்ட பொருட்களை ஜப்தி செய்தனர். இழப்பீடு வழங்காமல் இருந்த இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்