< Back
மாநில செய்திகள்
மழைக்கு லீவு விடுவதா வேண்டாமா என முடிவெடுப்பது கஷ்டமான வேலை - நெல்லை ஆட்சியர் கலகல பேச்சு
மாநில செய்திகள்

"மழைக்கு லீவு விடுவதா வேண்டாமா என முடிவெடுப்பது கஷ்டமான வேலை" - நெல்லை ஆட்சியர் கலகல பேச்சு

தினத்தந்தி
|
18 Nov 2022 8:53 AM IST

மழைக்கு விடுமுறை விடுவதா வேண்டாமா என முடிவெடுப்பது கடினமான வேலை என்று நெல்லை ஆட்சியர் கலகலவென பேசியுள்ளார்.

நெல்லை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மழைக்கு விடுமுறை விடுவதா வேண்டாமா என முடிவெடுப்பது கடினமான வேலை என்று நெல்லை ஆட்சியர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, நெல்லையில் இரவு நேரங்களில் மழை பெய்யும். காலையில் லேசான சாரல் அடிக்கும். காலையில் தாலுகாக்களில் மழை நிலவரம் குறித்து விசாரிப்பேன்.

அப்போது விடுமுறை விடுவதா வேண்டாமா என கேள்வி வரும். அதற்குள் மக்கள் விடுமுறை விடும்படி டுவீட்டரில் டேக் செய்வார்கள். பின்னர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை நிலவரம் குறித்து விசாரிப்பேன். அங்கு லேசான மழை பெய்வதாக தகவல்கள் வரும். பின்னரே விடுமுறை விட வேண்டாம் என முடிவெடுப்பேன்.

எனவே மழைக்கு விடுமுறை விடுவதா வேண்டாமா என முடிவெடுப்பது கடினமான வேலை என்று நெல்லை ஆட்சியர் கலகலவென பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்