< Back
மாநில செய்திகள்
ஐ.டி.ஐ. மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து மாணவன் படுகாயம்
சேலம்
மாநில செய்திகள்

ஐ.டி.ஐ. மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து மாணவன் படுகாயம்

தினத்தந்தி
|
30 Sept 2022 12:59 AM IST

சேலம் அரசு ஐ.டி.ஐ. மேற்கூரையில் இருந்து மாணவன் தவறி விழுந்து காயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னங்குறிச்சி:-

சேலம் அரசு ஐ.டி.ஐ. மேற்கூரையில் இருந்து மாணவன் தவறி விழுந்து காயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவன் படுகாயம்

சேலம் கோரிமேடு பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு சேலம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த கோகுல் (வயது 17) என்பவர் டர்னர் படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு நேற்று அவர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 20 அடி உயரத்தில் இருந்து மாணவன் கோகுல் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துவிட்டார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த மாணவனை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதனிடையே, மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்