விருதுநகர்
நிதி பற்றாக்குறையை குறைக்க உதவும்
|ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்து உள்ளதால் நிதி பற்றாக்குறையை குறைக்க உதவும் என பொருளியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்து உள்ளதால் நிதி பற்றாக்குறையை குறைக்க உதவும் என பொருளியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
அதிகரிப்பு
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த ஆகஸ்டு மாதம் தேசிய அளவில் மழை அளவு மிகவும் குறைந்துள்ள நிலையிலும், இமாச்சல பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் தேசிய அளவில் ஜி.எஸ்.டி. வரி வசூல் 10.8 சதவீதம் அதிகரித்து. ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 89 கோடி வசூலாகியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தான் மிக குறைவாக 2 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்துள்ளது. திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் அதிகபட்சமாக முறையாக 40 மற்றும் 39 சதவீதம் வரி வசூல் அதிகரித்துள்ளது.
வரி வசூல் உயர்வு
இறக்குமதி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில் உள்ளூர் பொருள் விற்பனை ஜி.எஸ்.டி. வரி வசூல் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் வரி விதிப்பு சதவீதம் உயர்த்தப்படாத நிலையில் வசூல் நடவடிக்கை காரணமாகவும் ஜி.எஸ்.டி. வரி வசூல் உயர்ந்துள்ளது என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலவரம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 612 கோடி ஆகும். கடந்த ஜனவரி மாதம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 554 கோடியாகவும், கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 35 கோடியாகவும், கடந்த ஜூன் மாதம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 447 கோடியாகவும் இருந்தது.
நிதி பற்றாக்குறை
தற்போது ஆகஸ்டு மாதம் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 89 கோடி வசூல் ஆகியுள்ளது. மொத்தத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சியை விட அதிகரித்துள்ளது. இது நிதி பற்றாக்குறையை குறைக்க வெகுவாக உதவும் என்று கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.