< Back
மாநில செய்திகள்
கே.பி.முனுசாமிக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் - புகழேந்தி
மாநில செய்திகள்

கே.பி.முனுசாமிக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் - புகழேந்தி

தினத்தந்தி
|
21 Aug 2022 8:43 PM IST

கே.பி.முனுசாமிக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம், அவரை பற்றி பேச கே.பி.முனுசாமிக்குதகுதி இல்லை என புகழேந்தி கூறியுள்ளார்.

ஓசூர்,

ஓசூரில் அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது,

அ.தி.மு.க.வுக்காக எத்தனையோ பேர் ரத்தம் சிந்தி உள்ளனர். கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்திருந்த காலத்தில், ஓ.பன்னீர்செல்வம் போல தலைவரை பார்க்க முடியாது. அவர் தமிழகத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவார் என கூறியவர் கே.பி.முனுசாமி.

தற்போது அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றுள்ளார். கே.பி.முனுசாமிக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை பற்றி பேச கே.பி.முனுசாமிக்கு தகுதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்