< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஐடி ரெய்டு - திமுக தொண்டர்களுக்கு மதிய உணவாக 'வெஜ் பிரியாணி' விநியோகம்
|26 May 2023 2:38 PM IST
கோவையில் ஐடி ரெய்டு நடந்த இடத்தில் குவிந்த திமுக தொண்டர்களுக்கு மதிய உணவாக 'வெஜ் பிரியாணி' வழங்கப்பட்டது.
கோவை,
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீட்டில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், கோவையில் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்களுக்கு மதிய உணவாக தண்ணீர் பாட்டில், வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது.