< Back
மாநில செய்திகள்
நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை வலுப்படுத்துவது மிக முக்கியம் - கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

"நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை வலுப்படுத்துவது மிக முக்கியம்" - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
24 Sept 2022 9:13 PM IST

2047-ல் உலக தலைமைத்துவத்தின் உச்சியை நாம் அடைய வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியின் 55-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

இதன் பின்னர் பேசிய அவர், நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும், அது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்றும் கூறினார். மேலும் 2047-ல் உலக தலைமைத்துவத்தின் உச்சியை நாம் அடைய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் நாம் வலுவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்