போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தீவிரமாக அமல்படுத்துவது அரசின் கடமை -ஐகோர்ட்டு
|போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மோட்டார் வாகன சட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை பல மடங்கு உயர்த்தி தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனாலும், சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அபராதத் தொகை உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இதனால் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் வாகன ஓட்டிகள் விதிகளுக்கு புறம்பாக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
அதிவேகமாக செல்வது, குடிபோதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குவது போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
ஆஸ்பத்திரியில் பணி
பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வருபவர்கள் துணிகர கொள்ளை மற்றும் நகைபறிப்பு போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மோட்டார் சைக்கிள்கள், இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படுவதால் அவ்வப்போது உயிரிழப்பு சம்பவங்களும், விபத்துகளும் அரங்கேறி வருகிறது.
எனவே போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். அத்துடன் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சை பிரிவில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவியாக குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பணியாற்ற அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அரசின் கடமை
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.