< Back
மாநில செய்திகள்
பர்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
ஈரோடு
மாநில செய்திகள்

பர்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

தினத்தந்தி
|
25 May 2023 2:25 AM IST

பர்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அந்தியூர்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சிக்கு உள்பட்ட சோளகனை பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் 38 தொகுப்பு வீடுகள், ஈரோடு வனக்கோட்டம் பர்கூர் வனச்சரகம் பழங்குடி மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி, பட்லூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். மேலும் சோளகனை பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி அரசு பொதுத்தேர்வில் 12-ம் வகுப்பில் பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஜோதிகா 600-க்கு 508 மதிப்பெண்கள் பெற்றதை பாராட்டி பரிசு வழங்கினார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ஆனந்த். இணை இயக்குனர் (குடும்ப நலம்) ராஜசேகர், உதவி பொறியாளர் சிவ பிரசாத், பர்கூர் ஊராட்சி தலைவர் மலையன், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, பர்கூர் ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்