புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்
|தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் வெ.இறையன்பு தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒய்வு பெறுகிறார். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிப்பது குறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிவ்தாஸ் மீனா கவனித்து வரும் நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் பதவி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெறும் சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி தலைவராகவும், பொதுத்துறை செயலாளராக நந்தகுமாரும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைபோல தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.