< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ் - ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல்
|6 April 2023 5:05 PM IST
சென்னை வரும் பிரதமர் மோடியை தனித்தனியே சந்திக்க ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அதேபோல், அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சூழலில், சட்ட போராட்டம் நடத்தி வரும் ஓபன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.