முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை - அண்ணாமலை பேட்டி
|தமிழகத்தில் மட்டும் தான் ஒரு முதல்-அமைச்சர் வெள்ளை அறிக்கை வழங்காமல் வெளிநாட்டு பயணம் சென்றுக் கொண்டிருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். .அப்போது அவர் கூறியதாவது,
சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது. மக்கும் குப்பை மக்காத குப்பைகளை அவர்கள் பிரித்தெடுப்பதே கிடையாது. இதன் வெளிப்பாடுதான் சிறுவன் உயிரிழப்பு சம்பவம்.அடுத்தது, மழைநீர் குப்பைகளுடன் கலக்கும் அது குடிநீர் பைப் வழியாக செல்லும். மக்கள் அதனை பருகுவார்கள். ஆனால் இதை பற்றி எல்லாம் சுகாதாரத்துறை அமைச்சருக்கோ மற்றவர்களுக்கோ கவலை இல்லை. இதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடப்பது கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் பேசுவது கிடையாது.ஈஷா பொறுத்தவரை யானை வழித்தடம் இல்லை. முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் ஒரு முதல்-அமைச்சர் வெள்ளை அறிக்கை வழங்காமல் தொடர்ந்து வெளிநாட்டு பயணம் சென்றுக் கொண்டிருக்கிறார்.துபாய் சென்று வந்து 2 வருடங்கள் ஆகிறது. ஆனால், அங்கு சென்று வந்ததற்கான பயன் என்ன ? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்தீர்கள் ? இதேபோல், சிங்கப்பூர், ஜப்பான் சென்றார்கள். பணம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன ?அரசு செலவில் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்றால் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.