< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல" - அமைச்சர் சேகர்பாபு
|4 Jan 2023 11:46 PM IST
பக்தர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல என்று தெரிவித்தார். குறைகளை களைந்து நிர்வாகத்தை சீராக்க வேண்டும், அதே சமயம் பக்தர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.