< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என கூறுவது சரியல்ல: கவர்னர் தமிழிசை பேட்டி
|13 Sept 2022 2:33 PM IST
புதுவை துணைநிலை கவர்னர், கும்பகோணத்தில் உலோகத்தாலான நடராஜர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவதற்காக திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி,
கும்பகோணத்தில் உலோகத்தாலான நடராஜர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் திருச்சி சென்றடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டலாமே தவிர, தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என கூறுவது சரியல்ல என்றார்.
மேலும் பெற்றோர், கல்வியாளர்களின் ஆலோசனைப்படிதான் மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிவித்துள்ளதாகவும், மாணவர்களும் தேர்வெழுத தயாராக இருப்பதாகவும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.