இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
|பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சொன்னதைச்செய்வோம். செய்வதை சொல்வோம் என்பது எங்களது வழிகாட்டும் நெறிமுறை. கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயக்கம் தி.மு.க., இது தி.மு.க. வின் தேர்தல் அறிக்கை அல்ல, தமிழக மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். 10 ஆண்டுகள் ஆண்ட மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
இந்தியாவின் கட்டமைப்புகள் அனைத்தையும் பா.ஜ.க. சிறுகச் சிறுக சிதைத்து விட்டது. கையில் கிடைத்த அதிகாரத்தை பா.ஜ.க. அரசு வீணடித்துவிட்டது.
இனியும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லது இல்லை. மாநிலங்களை அனுசரித்து செல்லும் அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்திய அரசியல் சாசன அமைப்பு சட்டத்தை காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்றார்.