"எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது எளிதானது அல்ல" - டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு
|காவல்துறையில் எல்லா நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரணவிஷயம் அல்ல தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
சென்னை,
காவல்துறையில் எல்லா நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரணவிஷயம் அல்ல தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
டிஜிபிக்கள் ஷகில் அக்தர், சுனில்குமார் சிங் ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, காவலதுறையில் சுனில் குமார் சிங்கும், ஷகில் அக்தரும் நேர்மையான அதிகாரிகளாக விளங்கினார்கள் எனவும், எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது எளிதானது அல்ல எனவும் பேசினார். மேலும், ஷகில் அக்தர் காவல் துறையில் எப்போதும் முக்கியமான பொறுப்புகளை கையில் வைத்திருந்தவர் என கூறிய அவர், ஆபத்தான ஆப்ரேஷன்களில் ஈடுபட்டவர் எனவும் தெரிவித்தார்
"எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது எளிதானது அல்ல" - டிஜிபி சைலேந்திர... https://t.co/IRV79hEAva https://t.co/lS31EIP1HK
— Thanthi TV (@ThanthiTV) November 1, 2022