< Back
மாநில செய்திகள்
த.வெ.க.வை தடுத்து நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல - அமைச்சர் எ.வ.வேலு
மாநில செய்திகள்

த.வெ.க.வை தடுத்து நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல - அமைச்சர் எ.வ.வேலு

தினத்தந்தி
|
5 Sept 2024 3:16 PM IST

மக்களின் உரிமைகளுக்காக உறுதுணையாக இருக்கும் கட்சியை தேர்தலில் மக்கள் ஆதரிப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மதுரை,

மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. நடிகர் விஜய்யின் கட்சி மற்றும் படத்தை தி.மு.க. தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. நடிகர் விஜய் கட்சி தொடங்கியபோது அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கி செயல்படுகின்றன. சில கட்சிகள் தொடங்கி காணாமல் போய்விட்டன. தமிழக வெற்றிக்கழகத்தை தடுத்து நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல. நாங்கள் யாரைக் கண்டும் பொறாமை கொள்ளமாட்டோம். தடுக்க மாட்டோம், முடிந்தால் வாழ்த்து செல்வோம். மக்களின் உரிமைகளுக்காக உறுதுணையாக இருக்கும் கட்சியை தேர்தலில் மக்கள் ஆதரிக்கின்றனர்." என்றார்.

மேலும் செய்திகள்