கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவதா ? சீமான் ஆவேசம்
|பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு என சீமான் கூறினார்.
திருச்சி ,
திருச்சி மண்னச்சநல்லூரி தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது,
பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு. அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
கப்பல் துறை தனியார், போக்குவரத்து துறை தனியார், கல்வி துறை தனியார் மருத்துவத்துறை தனியார் விமானத்துறை சாலை பொருள் தனியார், ரெயில்வே துறைகளை தனியாருக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன?கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவது கொடுமை. இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது.விலைவாசி உயர்வால் நமது வாழ்க்கை தரம் மாறிப்போச்சு. இந்த நிலை தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாறுதலை ஏற்படுத்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.