< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவது அவர்களுக்கு பெருமை - நடிகர் விஜய் குறித்து செல்லூர் ராஜு
மாநில செய்திகள்

'எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவது அவர்களுக்கு பெருமை' - நடிகர் விஜய் குறித்து செல்லூர் ராஜு

தினத்தந்தி
|
12 May 2024 3:39 PM IST

எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வது அவர்களுக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை,

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், "எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வது அவர்களுக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று சொல்லியிருக்கிறோம். அவர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரைப் போல், அவர் சம்பாதித்த பணத்தை ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து செய்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு யார் வாழ்த்து சொன்னாலும், அது சொன்னவர்களுக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை."

இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்