< Back
மாநில செய்திகள்
அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் 15 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் 15 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
26 Sept 2022 12:26 PM IST

இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் 15 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் 15 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கடந்த 11-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பணிக்கான போட்டி தேர்வை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நடத்தியது. 113 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் பங்கேற்றனர்.

இந்த தேர்வு வினாத்தாளில் 15 கேள்விகளுக்கான விடைகள் தவறாக அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தவறான விடைகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்