< Back
மாநில செய்திகள்
நெல்மணிகள் லாரிகளில் இருந்து சாலையில் கொட்டும் அவலம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நெல்மணிகள் லாரிகளில் இருந்து சாலையில் கொட்டும் அவலம்

தினத்தந்தி
|
25 May 2022 10:49 PM IST

நெல்மணிகள் லாரிகளில் இருந்து சாலையில் கொட்டும் அவலம்

நாகப்பட்டினம்:

நாகையில் இருந்து வெளியூருக்கு அரவைக்காக கொண்டு செல்லும் நெல் மணிகள் லாரிகளில் இருந்து சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறந்தவெளி சேமிப்பு மையம்

நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நாகை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நெல் மூட்டைகள் நாகை பகுதிகளில் உள்ள அரசு திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருந்து லாரிகளின் மூலம் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து சரக்கு ரெயிலின் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக திருச்சி, ஈரோடு, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நெல்மணிகள் கீழே ெகாட்டுகிறது

அவ்வாறு திறந்த வெளி சேமிப்பு மையத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வரும் போது நெல் மூட்டைகளில் சில சேதமடைந்து இருப்பதால், அவை சாலையில் வழிநெடுக கொட்டுகிறது. மேலும் நெல் மூட்டைகளை சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் வேகன்களில் ஏற்றும் போதும், லாரியிலேயே கொட்டி விடுகிறது.

நேற்று நாகையிலிருந்து தர்மபுரிக்கு சரக்கு ெரயிலில் அரவைக்காக நெல் மூட்டைகள் அனுப்பும் பணி நடைபெற்றது. அப்போது பெரும்பாலான நெல் மூட்டைகள் இத்துப்போய் இருந்ததால் அவை கிழிந்து நெல்மணிகள் கீழே கொட்டுகிறது. குறிப்பாக சரக்கு ரெயில் வேகன்களில் நெல் மூட்டையை இறக்கிவிட்டு, வெளியே வரும் லாரிகளில் இருந்து, நெல் மணிகள் தோணித்துறை ரெயில்வே கேட் அருகே சாலையில் அதிகளவில் கொட்டி கிடப்பதை காணமுடிகிறது. இதனால் நெல்மணிகள் வீணாகி வரும் அவலம் உள்ளது.

பாதுகாக்க வேண்டும்

எனவே சேமிப்பு மையத்தில் சேமிக்கப்படும் நெல்லை தரமான சாக்குகளில் பிடிக்க வேண்டும். மேலும் தரமான, சரியான அளவிலான தார்ப்பாய்களை பயன்படுத்தி நெல் மூட்டைகளை திறந்தவெளி சேமிப்பு மையத்தில் மூடி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்