< Back
மாநில செய்திகள்
ஹெட்செட் அணிந்தபடி தண்டவாளத்தை கடந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஐ.டி. ஊழியர் பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

'ஹெட்செட்' அணிந்தபடி தண்டவாளத்தை கடந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஐ.டி. ஊழியர் பலி

தினத்தந்தி
|
11 July 2022 3:17 PM IST

‘ஹெட்செட்’ அணிந்தபடி தண்டவாளத்தை கடந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஐ.டி. ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் நண்பர்களுடன் வசித்து வந்தவர் விஜய் (வயது 27). இவர், சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு விஜய், வீட்டுக்கு செல்வதற்காக வண்டலூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவர், 'ஹெட்செட்' அணிந்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் விஜய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான விஜய் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்