சென்னை
ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
|சென்னை சேலையூர் அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கற்பகவானி. டாக்டரான இவர், வீட்டிலேயே ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவருக்கு மதுசுதன் (47), சீனிவாசன் (38) என 2 மகன்கள். இவர்களில் மதுசுதன், ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சீனிவாசன் டாக்டர் ஆவார். சீனிவாசன், 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தனக்குத்தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது திதி கடந்த 6-ந் தேதி நடந்தது. தம்பிக்கு திதி கொடுத்த மதுசுதன், மன வருத்தத்தில் இருந்ததாகவும், வீட்டில் யாரிடமும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை மகள் சுருதியிடம் பேசிவிட்டு, மொட்டை மாடிக்கு சென்ற மதுசுதன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுசுதனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.