< Back
மாநில செய்திகள்
ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்தும் விவகாரம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
மாநில செய்திகள்

ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்தும் விவகாரம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

தினத்தந்தி
|
8 April 2023 12:06 AM IST

ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்துவது தொடர்பாக அரசுக்கு உத்தரடக்கோரிய மனுக்கள் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்துவதை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக மருத்துவ சேவை மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கான டிப்ளமோ படித்தவர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை இல்லாமல் தமிழகம் முழுவதும் கிளினிக்குகளை நடத்த மனுதாரர்களுக்கு உரிமை இல்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்