< Back
மாநில செய்திகள்
சமூக வலைதளத்தில் உறுதிசெய்யப்படாத தகவலை பதிவிட்ட விவகாரம் - அர்ஜுன் சம்பத்துக்கு நோட்டீஸ்
மாநில செய்திகள்

சமூக வலைதளத்தில் உறுதிசெய்யப்படாத தகவலை பதிவிட்ட விவகாரம் - அர்ஜுன் சம்பத்துக்கு நோட்டீஸ்

தினத்தந்தி
|
20 Oct 2023 8:01 PM IST

சமூக வலைதளத்தில் உறுதிசெய்யப்படாத தகவலை பதிவிட்டது குறித்து விளக்கம் கேட்டு அர்ஜுன் சம்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை,

சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தில் உறுதிசெய்யப்படாத தகவலை பதிவிட்டது தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை கருப்பாயூரணியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவபிரசாத், செக்கானூரணி சம்பவத்தில் அர்ஜுன் சம்பத் தவறான தகவலை பதிவிட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்