< Back
மாநில செய்திகள்
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை:2 பேருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை:2 பேருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
17 May 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை: 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 23). இவருடைய நண்பர் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிதங்கம் (23). இவர்களுக்கும், புதுக்கோட்டை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ஆனந்த் என்ற செரட்டை ஆனந்த் (35), புதுக்கோட்டை மறவன்மடத்தை சேர்ந்த அர்ஜூனன் மகன் முருகன் (32) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி, மாரித்தங்கம் ஆகியோர் தூத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்களாம். அப்போது அங்கு வந்த ஆனந்த் என்ற செரட்டை ஆனந்த், முருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, ஆனந்த் என்பவரை கைது செய்தார். தொடர்ந்து முருகனை தேடி வருகிறார். கைது செய்யப்பட்ட ஆனந்த் என்ற செரட்டை ஆனந்த் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்