போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு -அரசாணை வெளியீடு
|போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைத்தற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று குரோம்பேட்டையில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் விடுத்தனர்.
இந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைத்தற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
எல்.பி.எப், சிஐடியூ, டி.டி.எஸ்.எப். ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகளும் இக்குழுவில் பங்கேற்றிருப்பதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.