< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வெழுதியவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வெழுதியவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

தினத்தந்தி
|
24 Jun 2022 7:16 PM GMT

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வெழுதியவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியிடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 87.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் நேற்று முதல் தொடங்கியது. அந்தந்த பள்ளிகளில் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையெழுத்துடன் வினியோகிக்கப்பட்டன. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் தாங்கள் அடுத்து உயர்கல்வி செல்வதற்கு இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்