< Back
மாநில செய்திகள்
அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
மாநில செய்திகள்

அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

தினத்தந்தி
|
30 May 2024 11:25 AM IST

சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து 'அக்னிகுல் காஸ்மோஸ்' எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தரமணியில் இயங்கி வருகிறது. ராக்கெட் வடிவமைப்பை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உதவியுடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்துள்ளது. தனியார் பயன்பாட்டுக்கு சிறிய ரக ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக அந்த ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுதளத்தில் இருந்து முதல் முறையாக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்த 'அக்னிபான் சார்டெட்' எனும் சிறிய ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டது. இந்த ராக்கெட் சுமார் 300 கிலோ எடை கொண்ட விண்கலத்தை சுமந்து கொண்டு, பூமியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. 2 நிலைகள் கொண்ட அக்னிபான் ராக்கெட் பகுதி கிரயோஜெனிக் எந்திரம் மூலம் இயங்கக்கூடியது.

இந்த ராக்கெட்டை கடந்த மார்ச் 22-ந் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இறுதி கட்ட சோதனையின்போது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் ராக்கெட் ஏவுதல் 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், செமி கிரையோஜெனிக் மூலம் இந்த ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் ஏவும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்