< Back
மாநில செய்திகள்
திரவ எரிபொருள் மோட்டார் மூலம் ராக்கெட் தொழில்நுட்பம்: வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ
மாநில செய்திகள்

திரவ எரிபொருள் மோட்டார் மூலம் ராக்கெட் தொழில்நுட்பம்: வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ

தினத்தந்தி
|
23 July 2024 1:23 AM IST

திரவ எரிபொருள் மோட்டார் மூலம் புதிய ராக்கெட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக இஸ்ரோ நேற்று சோதனை செய்தது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மேம்பட்ட தொழில்நுட்ப ராக்கெட் (ஏ.டி.வி.) 'ரோகினி-560' என்ற சோதனை ராக்கெட்டை உருவாக்கி உள்ளனர். பொதுவாக எந்தவொரு ராக்கெட்டாக இருந்தாலும் ஒரு டேங்கில் எரிபொருளும் மற்றொன்றில் ஆக்சிஜன் உள்பட 2 டேங்குகளும் பொருத்தப்பட்டிருக்கும். எரிபொருளை எரிக்கத் தேவையான ஆக்சிஜனை இந்த டேங்க் தான் வழங்குகிறது.

ராக்கெட்டை மேல்நோக்கி கொண்டு செல்ல இந்த 2 டேங்குகளும் உதவுகிறது. இதனை 'உந்துசக்திகள்' என்று அழைக்கின்றனர். இந்த 2 டேங்குகளுமே ராக்கெட்டின் எடையை கணிசமாக கூட்டி விடுகிறது. இதனை கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி காற்று-சுவாச உந்துவிசை அமைப்பு எனப்படும் தனித்துவமான தொழில்நுட்பத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதித்து பார்த்தனர்.

இதனை தொடர்ந்து, மீண்டும் 8 ஆண்டுகளுக்கு பிறகு காற்று-சுவாச உந்துவிசை அமைப்பைப் பொருத்தி சோதனை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 'ரோகினி-560'- புதிய ராக்கெட்டில் இந்த 2-வது சோதனை காற்று சுவாச உந்துவிசை அமைப்பை திரவ எரிபொருள் மோட்டார் மூலம் பொருத்தி வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தனர்.

இது வெற்றிகரமாக அமைந்ததாக விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்