< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
கடற்கரையில் ஒதுங்கிய பூச்சிக்கொல்லி மருந்துகள்
|25 May 2022 12:24 AM IST
கடற்கரையில் ஒதுங்கிய பூச்சிக்கொல்லி மருந்துகள்
சாயல்குடி,
சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரைப் பகுதிகளில் பச்சை பாட்டில், வெள்ளை பாட்டில் என மொத்தம் 184 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கரை ஒதுங்கின. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றபோது தவறி கடலில் விழுந்து இருக்கலாம் அல்லது கடத்தி சென்றவர்கள் கடலோர காவல்படைக்கு பயந்து கடலில் வீசி இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து பல்வேறு கோணங்களில் வாலிநோக்கம் கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.