விழுப்புரம்
வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு ஐ எஸ் ஓ தரச்சான்று
|சிறப்பாக செயல்பட்டதற்காக வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு ஐ எஸ் ஓ தரச்சான்று கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த வளவனுாரில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் போலீசார், போலீஸ் நிலைய வளாகத்தையும், போலீஸ் நிலையத்தையும் தங்கள் வீட்டைப்போன்று கருதி சுத்தமாக பராமரித்ததோடு வழக்கு தொடர்பான ஆவணங்களையும் முறையாக பராமரித்தனர். இப்படி மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்து சிறப்பாக செயல்பட்டதற்காக வளவனுார் போலீஸ் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது.
இதையொட்டி வளவனூர் போலீஸ் நிலையத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு கருன் காரத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் மோகன் வாழ்த்துரை வழங்கினார். இதில் பயிற்சி முடிவடைந்து செல்லும் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருன்காரத்திற்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் தங்ககுருநாதன், ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, அன்பழகன், சேதுராமன், ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.