< Back
மாநில செய்திகள்
சென்னையில் 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்
மாநில செய்திகள்

சென்னையில் 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்

தினத்தந்தி
|
29 July 2023 10:43 PM IST

102 காவல் நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை சென்னை பெருநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுக் கொண்டார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், புகார் அளிக்க வரும் நபர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கவும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது 15 காவல் நிலையங்களுக்கு மட்டும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், 102 காவல் நிலையங்களை இது போன்று தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்