திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக முயற்சியா? - திருமாவளவன் விளக்கம்
|திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக முயற்சியா? என்பது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுவதாக பாஜக தலைவர் உள்ளிட்ட பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டி காட்டுகிறோம். காவல்துறையின் போக்குகளை நாங்கள் சுட்டி காட்டுகிறோம். அது நாங்கள் தோழமையும் சுட்டி காட்டுகின்ற ஒன்று.
ஆனால் எங்கள் நிலைப்பாட்டில் தொடக்கத்தில் இருந்து தெளிவாக இருக்கிறோம், உறுதியாக இருக்கிறோம். திமுக கூட்டணியை வலிமைப்படுத்துவது தான் எங்கள் நிலைப்பாடு. அது தமிழ்நாட்டையும் கடந்து அகில இந்திய அளவில் வழிகாட்டக்கூடிய அளவுக்கு வலிமைப்பெற வேண்டும் என்பது தா நிலைப்பாடு.
எந்த நிலையிலும் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே எவராலும் இடைவெளியை ஏற்படுத்த முடியாது. கொள்கை தெளிவு உள்ள எங்களால் முரன்களை எப்படி கையாள வேண்டும் .. வேண்டாம் என்பது தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.