< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா?

தினத்தந்தி
|
6 Jun 2023 12:59 AM IST

ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? என பயணிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 2-ந்தேதி இரவு நடந்த சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

சிக்னல் பிரச்சினை

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் வெறும் 'சிக்னல்' பிரச்சினையால் 3 ரெயில்கள் முட்டிமோதிக் கொண்டதில் 275 அப்பாவிப் பயணிகளின் உயிர்கள் பறிபோயிருப்பதை நினைக்கையிலே நெஞ்சம் பதறுகிறது.

வரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துகளை முற்றிலும் தடுக்க ரெயில்வே நிர்வாகம், தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அதன்மேல் உள்ள நம்பகத்தன்மை போய்விடும்.

இன்றைய நிலையில் ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று உணருகிறீர்களா? என்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பயணிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

பாதுகாப்பான பயணம்

செல்வராஜா (விருதுநகர் ரெயில்நிலையம்):-

நான் நெல்லையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். சென்னை சென்று விட்டு எனது மனைவி ஊரான விருதுநகருக்கு வந்துள்ளேன். ஒடிசா ெரயில் விபத்தின் தாக்கம் ெரயில் பயணத்தின் போது சக பயணிகள் யாரிடமும் தெரியவில்லை. எனக்கும் ெரயில்வே விபத்தின் தாக்கம் இல்லை.

இடையில் ெரயில் டிராக் மாறும் போது சத்தம் ஏற்பட்டால் சக பயணிகள் காமெடியாக பேசிக்கொண்டார்களே தவிர யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் ெரயில்வே நிர்வாகம் இம்மாதிரியான விபத்துகளை தவிர்க்க தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியது அவசியம். மேலும் ஏற்கனவே தென் மேற்கு ெரயில்வே நிர்வாக தலைவர் இமாதிரியான விபத்துகளை தவிர்க்க தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையிலும் அது செய்யப்படவில்லை என்று கூறப்படும் நிலையும் உள்ளது. ஆனாலும் இன்னும் ெரயில் பயணம் தான் பாதுகாப்பான பயணமாக கருதுகிறேன்.

நம்பிக்கை

அருப்புக்கோட்டை ஆத்திபட்டியை சேர்ந்த சிவக்குமார்:-

நான் ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயிலில் ஊர் திரும்பினேன். எனது குடும்பத்தார் ெரயிலில் 24 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்யும் நிலையில் அதனை தவிர்க்க வேண்டும் என்று என்னை அறிவுறுத்தினர். இதற்கு பதிலாக கூடுதல் கட்டணம் கொடுத்து விமானத்தில் வரலாம் என அவர்கள் கூறினர்.

எனக்கும் ெரயில் பயணம் சற்று பயமாகத்தான் இருந்தது. எனினும் முன்பதிவு செய்து விட்டதால் ெரயிலில் ஊர் திரும்பினேன். ெரயில் பயணம் பாதுகாப்பான பயணம் என்று கூறி வந்த நிலையில் ஒடிசா ெரயில் விபத்து இந்த எண்ணத்தை மாற்றி விட்டது. ெரயில் பயணத்தை தவிர சாலை வழியாக பயணம் செய்வது மேல் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. ெரயில்வே நிர்வாகம் இனி மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

உரிய நடவடிக்கை

சுதா, அனுராதா (ராஜபாளையம் ெரயில்நிலையம்):-

நாங்கள் வெளியூருக்கு அடிக்கடி ரெயில் மூலம் தான் செல்கிறோம். எந்தவித பயமும் இல்லாமல் சென்று வருகிறோம். தற்போது உத்தரகாண்டம் பகுதியில் அமைந்துள்ள ஆதி கைலாசம் கோவிலுக்கு செல்கிறோம். பயணத்தின் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் முதலுதவி அளித்து அடுத்த நிலையத்திலேயே மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.

பயணத்தின் போது பல்வேறு வசதிகள் இருப்பதால் அனைவரும் ரெயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். தற்போது நடந்த ரெயில் விபத்தை அறிந்து பதறி போனேன். பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய உரிய நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும்.

பயமாக இருக்கிறது

ரெயில் பயணி ரமேஷ்:-

பொதுவாக ரெயிலில் பயணம் செய்யும் பொழுது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். முதியவர்கள், நோயாளிகள் என எண்ணற்ற பேர் நீண்ட தூர பயணத்திற்கு ரெயிலில் செல்ல தான் விரும்புவர். இந்தநிலையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற விபத்தினை நினைக்கும் போது சற்று பயமாக தான் இருக்கிறது.

பயணிகள் நிம்மதியாக பயணம் செய்ய தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டணம் குறைவு

கடலூரை சேர்ந்த தெய்வக்கனி (அருப்புக்கோட்டை ரெயில்நிலையம்)

நல்ல பாதுகாப்பு, கட்டணம் குறைவு என்பதால் அனைவரும் ரெயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். ஆனால் தற்போது நடந்த விபத்தை பார்க்கும் போது ரெயிலில் பயணம் செய்ய பயமாக தான் இருக்கிறது. போதிய பாதுகாப்பு இல்லைேய என கருத தோன்றுகிறது. ரெயில்வே துறையிலும் பயணிகளின் பாதுகாப்பு முறை என்பது கேள்வி குறியாக உள்ளது. இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்விக்குறி

பட்டுக்கோட்டையை சேர்ந்த மேரி:-

ரெயில்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தாலும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பாதுகாப்பு விஷயத்திலும் தொழில்நுட்ப புரட்சியை ரெயில்வே நிர்வாகம் கொண்டு வர வேண்டும். ஒரு ரெயிலில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள், யார்? யார்? பயணம் செய்கிறார்கள்? எங்கிருந்து, எங்கு செல்கின்றனர் என அனைத்து பெட்டிகளிலும் பயணம் செய்பவர்களின் விவரங்களை ரெயில்வே நிர்வாகம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் ரெயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. இதனை மாற்ற இன்னும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கற்று தந்த பாடம்

சிவகுருநாதன் (ெரயில் நிலைய கண்காணிப்பாளர் பணி ஓய்வு):-

ெரயில்வே துறை பாதுகாப்பு மற்றும் கால அட்டவணையில் கவனம் செலுத்துகிறது. என்னுடைய 40 ஆண்டு கால பணி அனுபவத்தில் தற்போது உள்ள இன்டர் லாக் சிக்னல் சிஸ்டத்திலும் பணியாற்றியுள்ளேன். இந்த நவீன தொழில்நுட்பத்தில் தவறு நடக்கிறது என்றால் இதை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பது உறுதியாகிறது. ஒடிசா ெரயில் விபத்து மனித தவறால் நடந்திருக்க வாய்ப்பில்லை.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ெரயில்வே துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பொது நிதிநிலை அறிக்கை உடன் ெரயில்வே துறையில் இணைக்கப்பட்டு விட்டது. ெரயில்வே துறைக்கான பகுதி நிதி ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதில் விமான நிலையங்கள் போல ெரயில் நிலையங்களும் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பதில் ெரயில்வே துறை கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்த இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ஒடிசா ெரயில் விபத்து ெரயில்வே துறைக்கு கற்றுத் தந்துள்ள பாடம். எனவே இதில் ெரயில்வே துறை இனிவரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

வேதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே பயணிகள் சங்கத்தை சேர்ந்த சரவணன்:-

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ெரயில் விபத்து மிகவும் மோசமானது வேதனைக்குரிய விஷயமாகும். ஆனால் ெரயில்வே துறை மேம்படுத்தப்பட்ட பிறகு ெரயில் விபத்து குறைந்து உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் ெரயில் விபத்துகள் கிடையாது. ஆனாலும் மனித உயிர்களை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மிகவும் கண்ணும், கருத்துமாகவும் செயல்பட வேண்டும்.

ெரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது என மக்கள் மனதில் இருப்பதால் அதிகம் பேர் ெரயில் பயணத்தை பயன்படுத்துகிறார்கள். இதனை ரெயில்வேநிர்வாகம், மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்