< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'ஊட்டிக்கே இந்த நிலைமையா..?' இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவு
|29 April 2024 1:45 AM IST
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படக்கூடிய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.
அதன்படி பார்க்கும்போது, 'ஊட்டிக்கே இந்த நிலைமையா?' என நினைக்கத்தோன்றும் அளவுக்கு ஊட்டியில் இதுவரை இல்லாத அளவில் வெப்பம் சுட்டெரித்து இருக்கிறது.