பழனி கோவில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு
|பழனி கோவிலில் கும்பாபிஷேகபணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
பழனி,
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16வருடங்களுக்கு பிறகு வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு குறைந்த நாட்களே உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவதாஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வருகிற 23ந் தேதி மூலவருக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் அன்று மாலை 3 மணி வரை மட்டுமே மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படு வார்கள். அதன்பிறகு 26ந் தேதி வரை பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்ைல. அதே வேளையில் யாகசாலையில் எழுந்தருளும் சாமியை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலை க்கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பக்தர்கள் எல்.இ.டி. திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழனி கோவிலுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரு வார்கள் என்ப தால் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க ப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.