< Back
மாநில செய்திகள்
சோளக்காட்டில் உடல் எரிந்து பிணமாக கிடந்த வாலிபர் களரம்பட்டியை சேர்ந்தவரா?
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சோளக்காட்டில் உடல் எரிந்து பிணமாக கிடந்த வாலிபர் களரம்பட்டியை சேர்ந்தவரா?

தினத்தந்தி
|
24 Feb 2023 12:45 AM IST

சோளக்காட்டில் உடல் எரிந்து பிணமாக கிடந்த வாலிபர் களரம்பட்டியை சேர்ந்தவரா? என போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் டாஸ்மாக் கடையின் அருகே சோளக்காட்டில் கடந்த 21-ந்தேதி வாலிபர் ஒருவர் உடல் எரிந்து கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவரை யாரேனும் கொலை செய்து எரித்து விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்தவர் பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியை சேர்ந்த வாலிபர் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவரது பெற்றோர் தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறதாம். இதனால் போலீசார் புலம்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்