< Back
மாநில செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்குகிறதா ஓபிஎஸ் தரப்பு..? ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை
மாநில செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்குகிறதா ஓபிஎஸ் தரப்பு..? ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை

தினத்தந்தி
|
4 Feb 2023 12:21 PM IST

இந்த ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ. பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சேலம் மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அங்கு, பொதுக்குழு உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை, புகைப்படம் நகல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஷ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பொது வேட்பாளர் தேர்வு, தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்