< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சனாதனம் குறித்து பா.ஜ.க.வினர் விவாதிக்க தயாரா? - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி
|8 Sept 2023 9:49 AM IST
சனாதனம் என்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு தத்துவம் என்று டி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சனாதனம் குறித்து அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் விவாதிக்க தயாரா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-
"சனாதனம் குறித்து மக்கள் மன்றத்தில் விவாதிக்க அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் தயாரா? சனாதனம் என்பதற்கு உங்கள் இலக்கணம் என்ன? அதை சொல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
சனாதனம் என்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு தத்துவம். இன்று மானிட சமுதாயத்தில் தொடர்ச்சியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாற்றம் ஒன்று தான் மாறாமல் இருக்கிறது. இதனை சனாதனம் ஏற்றுக்கொள்வதில்லை. அது தான் இன்று பிரச்சனைக்கான அடிப்படை காரணமாக இருக்கிறது."
இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.