< Back
மாநில செய்திகள்
தார்ச்சாலை தரமாக அமைக்கப்பட்டதா?
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தார்ச்சாலை தரமாக அமைக்கப்பட்டதா?

தினத்தந்தி
|
28 Sept 2023 12:15 AM IST

ராமநாதபுரம் யூனியனில் தார்ச்சாலை தரமாக அமைக்கப்பட்டதா? என கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் யூனியனில் தார்ச்சாலை தரமாக அமைக்கப்பட்டதா? என கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் யூனியனில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்தியூத்து ஊராட்சியில் ரூ.92 லட்சம் செலவில் 2.3 கி.மீ. தூரம் தார் சாலை அமைக்கும் பணி, எருமைப்பட்டியில் ரூ.1.26 கோடி செலவில் 3.3 கி.மீ தூரம் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார். சாலையின் லேயர்கள் சரியாக அமைக்கப்பட்டு தார் ஊற்றப்பட்டுள்ளதா? சாலையின் இருபுறமும் பலமாக உள்ளதா? பணிகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.

கலந்து கொண்டவர்கள்

மழைக்காலங்களில் சாலையில் அரிப்பு ஏற்படாமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் யூனியன் ஆணையாளர்கள் செந்தாமரை செல்வி, சேவுகபெருமாள், என்ஜினீயர்கள் கணபதி, அர்ஜுனன், அத்தியூத்து ஊராட்சி தலைவர் அப்துல் மாலிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்