< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? - சபாநாயகர் அப்பாவு கருத்து
|19 Sept 2024 7:41 PM IST
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி இருக்க வேண்டும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் பகுதியில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியுமா? என்பதே மிகப்பெரிய கேள்வி. ஒரு நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும், மக்களுக்கு அமைதியான வாழ்க்கை இருக்க வேண்டும்.
எனவே, முதலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் அளவிற்கு மாநிலங்களை தயார்படுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்தது போல்தான் தற்போதும் நடக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.