< Back
மாநில செய்திகள்
துணை முதல்-அமைச்சராக தி.மு.க.வில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? ஜெயக்குமார் கேள்வி
மாநில செய்திகள்

துணை முதல்-அமைச்சராக தி.மு.க.வில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? ஜெயக்குமார் கேள்வி

தினத்தந்தி
|
24 Sept 2024 2:07 PM IST

தி.மு.க.வில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவி ஏன் என ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை. திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி இல்லையா? மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதல் அமைச்சர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர். தி.மு.க.வில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவி கொடுக்க முயற்சி நடப்பது ஏன்? துணை முதல் அமைச்சராக உதயநிதியை தவிர தி.மு.க.வில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்